Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்; முதலீட்டாளர்களே உஷார் - செபி வலியுறுத்தல்

முதலீட்டாளர்கள் செபியிடம் பதிவு செய்த முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் பங்குச் சந்தை ரிசர்ச் அனலிஸ்ட்களிடம் மட்டுமே ஆலோசனைகளை கேட்டு முதலீடுகளை தீர்மானிக்க வேண்டி  இந்திய பங்குச்சந்தை கட்டுப்பான அமைப்பான செபி கேட்டுக்கொண்டுள்ளது.

பங்குச்சந்தையில் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கும் வகையில் செபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு குறித்த ஆலோசனை மற்றும் பங்குச் சந்தை குறித்த ஆய்வறிக்கைகளை செபியிடம் பதிவு செய்த முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் ரிசர்ச் அனலிஸ்ட்களிடம் மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ளுமாறு செபி கேட்டுக் கொண்டுள்ளது.
பங்கு பரிந்துரை செய்பவர்கள் செபி அமைப்பிடம் ரிசர்ச் அனலிஸ்ட் ( Research Analyst) என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதற்கு பங்குச் சந்தை ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல் ஆய்வு குறித்த செபி அமைப்பின் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த ரிசர்ச் அனலிஸ்ட்கள் மட்டுமே பங்குகளை வாங்க, விற்க, தக்கவைத்துக் கொள்ள (Buy / Sell / Hold)  பரிந்துரை செய்ய வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில் நல்ல அனுபவம் கொண்ட பலர் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதால் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளார்கள். மேலும் நம் நாட்டில் பங்குச் சந்தை ஃபண்டமென்டல் ஆய்வு, டெக்னிக்கல் ஆய்வு இரண்டையும் குறித்த அறிவை கொண்டவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். இது வரைக்கும் சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டும்தான் ரிசர்ச் அனலிஸ்ட் ஆக செபி அமைப்பிடம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே முதலீட்டாளர்கள் டிவி, பத்திரிக்கை போன்ற விளம்பரங்கள் பார்த்து போலிகளிடம் ஏமாறாத வகையில் முதலீட்டு ஆலோசகர் மற்றும் ரிசர்ச் அனலிஸ்ட்களிடம் மட்டுமே ஆலோசனைகளை கேட்டு அதன்படி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு செபி வலியுறுத்தியுள்ளது.
 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ