Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிபிஎஃப்-ல் முதலீடு செய்பவர்களின் கவனத்திற்கு....

பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படும் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இனிப்பான ஒரு செய்தி அரசு தரப்பிலிருந்து வந்திருக்கிறது. இதுவரை பிபிஎஃப் கணக்கில் வைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது பணத்தை 15 ஆண்டு நிறைவடைந்து முதிர்வடைவதற்கு முன் எடுக்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது.

ஆனால் தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 வருடங்கள் கழித்து பிபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை தவிர்க்க முடியாத அவசியத்தின் பேரில் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் அவசியமான நேரத்தில் தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகளுக்கும், பிள்ளைகளின் மேல் படிப்பு செலவுகளுக்கும் இதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் அதற்கான காரணங்களை உறுதி செய்யும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மருத்துவ காரணங்கள் என்றால் அதற்கான ஆவணங்களை மருத்துவரிடமிருந்து வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஜூலை-செப்டம்பர் மாதங்களுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ