Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

Brexit ஒட்டெடுப்பால் உஷார் நிலையில் சந்தை!

காலை 9:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (22.06.16) காலை நேர வர்த்தகத்தில் மந்தநிலையில் வர்த்தகமாகி வருகிறது.

ஆசிய மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகம், முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்ததால் இந்திய பங்குச்சந்தை நேற்று இறக்கத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது இந்திய பங்குச்சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. நாளை இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து வாக்களிப்பு நடைபெற உள்ளதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.45 புள்ளிகள் சரிந்து 26,801.33 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.20 புள்ளிகள் சரிந்து 8214.70 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,080.00 1.02%
டெக் மஹிந்திரா 539.55 0.85%
டாடா பவர் 73.75 0.61%
ஆரோபிந்தோ பார்மா 725.40 0.57%
அதானி துறைமுகங்கள் 204.20 0.47%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 318.95 -1.77%
பார்தி இன்ப்ராடெல் 344.95 -0.88%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,334.00 -0.70%
டாடா மோட்டார்ஸ் 482.15 -0.57%
எச்யூஎல் 866.00 -0.49%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ