Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக அதிநவீன போயிங் விமானம்!

பிரதமர் மோடியின் வெளிநாடு பயணத்துக்காக அதிநவீன போயிங் ரக விமானங்களை வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

பிரதமர் மோடி முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இரு நாடுகளின் நட்புறவுக்காகவும் அவ்வப்போது அரசுமுறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார். தற்போது, தனது வெளிநாட்டு பயணத்துக்காக மோடி ராணுவத்தில் உள்ள போயிங் 747 ரக விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது பயணம் செய்யும் போயிங் 747 ரக விமானத்துக்கு பதிலாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போயிங் 777–300 ரக விமானத்தை வாங்கி பயன்படுத்த ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட இருக்கும் இந்த போயிங் ரக விமானங்களுக்கு ‘ஏர் இந்தியா ஒன்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தயாராகும் இந்த வகை, போயிங் விமானம் ஒன்றின் விலை சுமார் ரூ.2,100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ