Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் அரவிந்த் சுப்ரமணியம்? மத்திய அரசு ரகசிய வாக்கெடுப்பு!

தற்போது பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்ரமணியம், அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு நடத்திய ரகசிய வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பரில் முடிவடைகிறது. இந்த நிலையில் இவர் 2 வது முறையாக கவர்னராக பதவி வகிக்க விரும்பவில்லை என கூறிவிட்டார். இதனையடுத்து அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யாரை நியமிக்கலாம் என மத்திய அரசு கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் தற்போது பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்ரமணியத்திற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யாரை நியமிக்கலாம் என பொருளாதார நிபுணர்களிடம் மத்திய அரசு கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக நிதி துறை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் 13 பேரில் 7 பேர் அரவிந்த் சுப்ரமணியணை கவர்னராக நியமிக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் இந்த கருத்து கணிப்பில் இவரைத்தவிர வேறு எந்த நபரும் இரண்டு வாக்குகள்கூட பெறவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யாரை நியமிக்கலாம் என்பதில் 5 பேரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அரவிந்த் சுப்ரமணியனுத்திற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close