Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுமா? முதலீட்டாளர்கள் கலக்கத்தில் வர்த்தகம்

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (22.06.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது ப்ளாட் ஆக வர்த்தகம் தொடங்கியது. நாளை ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். சர்வதேச அளவில் இந்த பிரச்சினை பெரிதாக எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும்பட்சத்தில் அது சர்வதேச அளவில் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தை இன்று இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 47.13 புள்ளிகள் சரிந்து 26,765.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 16.20 புள்ளிகள் சரிந்து 8203.70 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 207.35 2.02%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,105.10 1.84%
கோல் இந்தியா 317.50 1.44%
அம்புஜா சிமென்ட்ஸ் 242.85 1.10%
லூபின் 1,461.90 0.85%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 314.80 -3.05%
பார்தி Infratel 339.00 -2.59%
டாடா மோட்டார்ஸ் 472.70 -2.52%
கெயில் 374.80 -2.03%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,311.20 -1.38%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close