Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா, எல்ஐசி தலைவர் ராய் முடிவு!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ராய் தனது பதவிக் காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.


அவர் தனது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சகத்திடம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து நிதி அமைச்சகம் முடிவு செய்யும். இதுவரை இந்த ராஜினாமாவுக்கான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

2013ல் எல்ஐசியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 30 வருடங்கள் இன்ஷூரன்ஸ் துறையில் அனுபவம் பெற்றவர். இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதிவிக்காலம் மீதமிருக்கிறது. தற்போது எல்ஐசியின் நிர்வகிப்பில் 18 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ