Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

27 ஆயிரத்தைத் தாண்டிய சென்செக்ஸ், ஐரோப்பிய சந்தை எதிரொலி!

ராஜன் எக்ஸிட், பிரிட்டன் எக்ஸிட் என்று சில நாட்களாகவே சந்தையை பாதிக்கக் கூடிய சில செய்திகள் வந்திருந்த போதிலும் இந்தியச் சந்தை ஏற்றத்தில் இருப்பது பாசிட்டிவான விஷயமாக உள்ளது.

இதன்படி இன்று (23.6.16) ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியச் சந்தை காலையில் இறக்கத்தில் தொடங்கியது.

ஆனால் அதன்பிறகு மெல்ல ஏற்றமடைய தொடங்கிய சந்தை மதிய நேரத்திற்கெல்லாம் சென்செக்ஸ் 200 புள்ளிகளைத் தாண்டி ஏற்றமடைய தொடங்கியது. சில வாரங்களுக்கு முன் 27 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் குறைந்த சென்செக்ஸ் இன்றைய வர்த்த முடிவில் 27 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி உள்ளது. நிஃப்டியும் இன்று வர்த்தக முடிவில் 66 புள்ளிகள் உயர்ந்து 8,270.45 புள்ளிகளாக உள்ளது. இதற்கு காரணம் ஐரோப்பிய சந்தைகள் பாசிட்டிவாக இருந்ததுதான்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close