Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரெக்ஸிட் தாக்கத்தினால் கடும் இறக்கத்தில் சந்தை, வாங்க வேண்டிய தருணமா?

இன்று (24.6.16) இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் அதிகபட்சமாக 3.5 சதவிகிதம் இறக்கம் கண்டுள்ளன. இதற்கு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற்றம் தான் முக்கிய காரணமாக உள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இதற்கான முடிவு இன்று காலை 11.30 மணியளவில் வெளியாக இருக்கிறது. ஆனால் பிரிட்டன் வெளியேறும் என்ற எதிர்பார்ப்பால் ஆசியச் சந்தைகள் பெருமளவில் இறக்கத்தைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

10.10 மணி அளவில் சென்செக்ஸ் 964.14 புள்ளிகள் குறைந்து 26,038.08 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 300 புள்ளிகள் விழுந்து 7,967 என்ற நிலையில் வர்த்தகமானது. இந்த நிலையில் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் இறங்கியுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக வால்யூம்களில் பங்குகளை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 11 சதவிகிதம் விலை குறைந்து வர்த்தகமாகிறது. மேலும் டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா ஆகியவை அதிகளவில் இறக்கம் அடைந்துள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ