Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா மோட்டார்ஸ் பங்குகள் வீழ்ச்சியடைய காரணம் இதுதான்...!

இந்தியப் பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிக அளவில் சரிவை சந்தித்தன. அதிபட்சமாக 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு ஒரே காரணம் பிரெக்ஸிட்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகு முடிவினால் பிரிட்டனின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை கடும் பாதிப்புக்குள்ளாகும். பிரெக்ஸிட் தாக்கத்தினால் அந்த நிறுவனத்தின் லாபத்தில் 1470 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாகுவார் நிறுவனம் ஒரு காலாண்டில் 5,20,000 கார்களை ஐரோப்பாவில் விற்று வருகிறது. ஐரோப்பிய யூனியன் உடைந்தால் பெரும் நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்திக்க வேண்டி இருக்கும்.

இதன் காரணமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ