Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியது பிரிட்டன்: தொடரும் சந்தை சரிவு!

உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரெக்ஸிட் முடிவுகள் வெளியாகிவிட்டன. வெற்றிகரமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.

இதற்கான வாக்கெடுப்பு வியாழன் அன்று நடந்தது. அதில் பிரிட்டன் மக்கள் 51.8 சதவிகிதம் வெளியேறலாம் என்றும். 48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் கழுத்து நெருக்கத்தில் இருந்தாலும் பெரும்பான்மை அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இதனால் உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக 11.30 மணி அளவில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3.7 சதவிகிதமும், நிஃப்டி 3.8 சதவிகிதம் சரிந்துள்ளது.

ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பிரிட்டனின் இந்த முடிவால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் உண்டாகும் என்று வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close