Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளைஞர்களின் விருப்பத்தை நிராகரித்த பிரிட்டன்: கிரேஸி சர்வே முடிவுகள்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறலாமா வேண்டாமா என்ற அதிகாரபூர்வ வாக்கெடுப்பு வியாழன் அன்று நடந்தது. அதில் 51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும்,  48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். இறுதியாக பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

ஆனால் இதில் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால் இளைஞர்கள் பெரும்பாலானோர் யூனியன் தொடர விரும்பியிருக்கிறார்கள். வயதானவர்கள்தான் யூனியனிலிருந்து வெளியேற விரும்பியிருக்கிறார்கள்.

வாக்கெடுப்பு முன்பு ஜூன் 17-19 தேதிகளில் yougov என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளன.


அதன்படி 18-24 வயதுள்ள இளைஞர்களில் 64 சதவிகிதத்தினர் ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் 65க்கு மேல் வயதானவர்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இறுதி முடிவுகள் முற்றிலும் இளைஞர்களின் விருப்பத்தை நிராகரித்து வந்துள்ளது.
இங்கிலாந்து இளைஞர்களின் சராசரி வயது 21 எனில் அவர்கள் வாழக்கூடிய அடுத்த 69 ஆண்டுகளுக்கும் அவர்கள் விரும்பிய முடிவுக்கு மாறான ஒரு சூழலில் அவர்கள் இனி வாழவேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின் விருப்பம் வேலைவாய்ப்பும், தொழில் வளர்ச்சியுமாகத்தான் இருக்க முடியும் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆனால் 10-15 ஆண்டுகள் வாழப் போகிற வயதானவர்கள் ஏன் இங்கிலாந்து யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ