Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரிட்டன் வெளியேற்றத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை; அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்விந்த் சுப்ரமணியன் கூறுகையில்," இந்தியாவில் வாக்களிக்க தகுதி உடையவர்களில், வரி செலுத்துபவர்கள் 4 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். ஆனால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை பார்க்கும்போது 23 சதவிகிதமாக இருக்க வேண்டும். அதனால் வரி விலக்கு எல்லைகளை உயர்த்தப்போவதில்லை.

பிரிட்டன் வெளியேறியதால் ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்சினையை எளிதாக சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் பலமாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நடக்கும் முக்கியமான நிகழ்வு இதுவாகும்" என அவர் கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ