Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரெக்ஸிட் பிரச்சினையால் சீனா விளையாண்டால் இந்தியா கதி?

மாலை 3:30 மணி நிலவரம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த பிரச்சினையால் சீனா தனது நாணயத்தின் மதிப்பை குறைத்தால் சென்செக்ஸ் 22,000 புள்ளிகள் வரை சரிவடைய வாய்ப்புள்ளதாக அம்பிட் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் பெரும்பாலான பிரிட்டன் வாசிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என வாக்களித்தனர். இதனால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இந்த நிலையில் பிரெக்ஸிட் பிரச்சினையால் 2 வது முறையாக ஏதாவது தாக்கம் ஏற்பட்டு சீனா தனது நாணயத்தின் மதிப்பை குறைத்தால் அது இந்திய பங்குச்சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 22,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக அம்பிட் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் 5.25 புள்ளிகள் உயர்ந்து ப்ளாட் ஆக முடிவடைந்துள்ளது. சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமானதால் சந்தை ப்ளாட் ஆக முடிவடைந்துள்ளது.


விலை அதிகரித்த பங்குகள்

ஆரோபிந்தோ பார்மா 723.90 3.28%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,396.00 3.22%
பேங்க் ஆப் பரோடா 151.85 3.19%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,246.60 2.96%
எஸ்பிஐ 217.15 2.79%

விலை குறைந்த பங்குகள்

டிசிஎஸ் 2,495.85 -3.03%
இன்போசிஸ் 1,166.20 -2.37%
ஜீ மகிழ்விக்க 439.80 -1.92%
ஏஷியன் பெயின்ட்ஸ் 974.30 -1.54%
இன்டஸ் இன்ட் வங்கி 1,079.80 -1.46%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close