Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னேற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!

காலை 10.30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (28.06.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஆசிய மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் காலை நேர தொடக்கத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகத் தொடங்கியது. இதன்பிறகு இந்திய பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளதால் சந்தை அதிகரித்து காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பிரச்சினையால் கடந்த நாட்களாக சந்தை சரிந்து காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 66.39 புள்ளிகள் உயர்ந்து 26,469.98 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 23.40 புள்ளிகள் உயர்ந்து 8116.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 105.00 4.63%
எச்யூஎல் 876.55 2.06%
பார்தி இன்ப்ராடெல் 333.95 1.92%
பார்தி ஏர்டெல் 357.85 1.91%
லூபின் 1,505.00 1.75%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 289.75 -2.08%
டாடா மோட்டார்ஸ் 440.00 -1.99%
என்டிபிசி 147.70 -1.01%
ஜீ மகிழ்விக்க 435.75 -0.92%
ஐசிஐசிஐ வங்கி 230.80 -0.82%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ