Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளில் அதிக சம்பளம் வாங்கும் நபர் இவர்தான்!

நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் தலைவர்களில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஆதித்யா பூரி அதிக சம்பளம் வாங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சொத்து தர மதிப்பு ஆய்வு கொள்கைகள் அடிப்படையில், 2015-16 ஆம் நிதியாண்டில் ஆதித்யா பூரி சம்பளம் 31 சதவிகிதம் உயர்ந்து ரூ. 9.73 கோடியாக உள்ளது. தனியார் வங்கியின் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபராக முதலிடத்தில் இவர் உள்ளார்.

இவருக்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சம்பள மதிப்பு 28 சதவிகிதம் உயர்ந்து ரூ.5.50 கோடியாக உள்ளது. தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சாரின் ஊதிய மதிப்பு 22 சதவிகிதம் சரிந்து கடந்த ஆண்டு ரூ. 4.79 கோடி ஊதியம் வாங்கியுள்ளதாக வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியின் இதர பணியாளர்களின் ஊதியத்தோடு ஒப்பிடுகையில், பணியாளர்களின் சராசரி சம்பளத்தைவிட ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கொச்சாரின் ஊதியம் 100 மடங்கு அதிகமாகும். ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரியின் சம்பளம் 179 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close