Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இண்டர்நெட் இல்லாமலே சேவை; பேடிஎம் அதிரடி திட்டம்!

இணை­ய­தள வசதி இல்­லாமல் பேடிஎம் அப்பிளிகேஷனை பயன்­ப­டுத்தும் சேவையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்­துள்­ளது.

பேடிஎம் அப்பிளிகேஷன் சேவையை பெறு­வ­தற்கு போனில், இணை­ய­தள வசதி இருக்க வேண்டும். இந்த நிலையில், இணைய வசதி இல்­லாமல் மொபைல் போனில் அப்பிளிகேஷன் சேவையை வழங்க பேடிஎம் திட்டமிட்டுள்ளது.

பேடிஎம் நிறு­வ­னத்தின் அப்பிளிகேஷன் மூலம் மொபைல் போன் ரீசார்ஜ், டிடிஎச், ரீசார்ஜ், பண பரி­மாற்றம் உள்­ளிட்ட பல்வேறு சேவை­களை வாடிக்­கை­யா­ளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்­போது, பேடிஎம் நிறு­வ­னத்­திற்கு 12 கோடி வாடிக்­கை­யாளர்கள் உள்­ளனர். இதை, 2020ம் ஆண்­டிற்குள், 50 கோடி­யாக அதி­க­ரிக்க, இந்த நிறு­வனம் திட்டமிட்டுள்ளது. இணை­ய­தள வசதி இல்­லாமல், பேடிஎம் நிறுவனத்தின் ஆப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு, பார்­கோடு அல்­லது, ‘ஒன் டைம் பாஸ்வோர்ட்’ மூலம் சேவை அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ