Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினியின் கபாலி: ரசிகர்களை விட நிறுவனங்கள் அதிக ஆர்வம்?

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் அடுத்த மாதம் 15 ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், ரசிகர்களைவிட நிறுவனங்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.

ரஜினியின் கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, தாய், மலாய், சைனீஸ் மற்றும் ஜாப்பானீஸ் மொழிகளில் வெளியிடப்படுகிறது. வெளிநாடுகளில் 6,000 திரையரங்குகள் உட்பட உலகம் முழுவதும் 10,000 திரையரங்கில் கபாலி திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் ரூ.80 முதல் ரூ.100 கோடி வரை செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கபாலி படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முன்னணி நிறுவனங்கள் போட்டா போட்டி நடத்தி வருகின்றன.

கபாலியுடன் இணைந்துக் கொள்ள ஏர் ஏசியா விமான நிறுவனம் முந்திக் கொண்டது. இது தவிர இப்போது கபாலி படத்துடன் அமேசான், ஏர்டெல், ஸாப்சிஜே மற்றும் கேட்பேரி 5 ஸ்டார் போன்ற முன்னணி நிறுவனங்களும் இணைந்துள்ளது. இதில் டி ஷர்ட் மற்றும் கீ செயின்கள் வரும் ஜூலை முதல் அமேசானில் விற்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மேலும் 100 நிறுவனங்கள் கபாலியுடன் தங்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. இது குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் தெரிவிக்கப்படும் என கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ