Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருவமழை நம்பிக்கையால் இந்திய சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (28.06.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


கடந்த சில நாட்களாகவே ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த முடிவால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் இறக்கத்தை சந்தித்தன. இந்த நிலையில் இன்றும் ஆசிய மற்றும் சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமானதால் இந்திய பங்குச்சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக தொடங்கியது. இதன் பின் பருவமழை நன்றாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கத் தொடங்கியதால் சந்தை அதிகரித்து காணப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 121.59 புள்ளிகள் உயர்ந்து 26,524.55 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.15 புள்ளிகள் உயர்ந்து 8127.85 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

லூபின் 1,544.70 4.43%
ஐடியா செல்லுலார் 104.35 3.99%
எச்யூஎல் 887.75 3.36%
பார்தி இன்ப்ராடெல் 338.55 3.33%
போஷ் 21,523.40 2.83%

விலை குறைந்த பங்குகள்

ஹெச்சிஎல் டெக் 713.20 -2.97%
டாடா மோட்டார்ஸ் (டி) 287.55 -2.82%
டாடா மோட்டார்ஸ் 440.40 -1.90%
ஹிண்டால்கோ 118.05 -1.46%
டிசிஎஸ் 2,463.95 -1.28%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ