Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச நிலவரங்களால் சென்செக்ஸ் அதிகரிப்பு

காலை 10:20 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (29.06.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து அந்நாட்டில் கடந்த 23–ந் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய கூட்டணியில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு 52 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். 48 சதவிகிதத்தினர் நீடிக்கலாம் என கூறியுள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு செய்தார். இதனால் உலக பங்கு வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. ஆசியாவிலும் பல நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. இங்கிலாந்து வாக்கெடுப்பு முடிவுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் மீள முயற்சித்ததே இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே இந்தியாவிலும் முன்னேற்றம் இருந்தது.

இதுமட்டுமின்றி ஜப்பானிய மைய வங்கி புதிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக சந்தை அதிகரித்து காணப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 173.75 புள்ளிகள் உயர்ந்து 26,698.15 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 55.75 புள்ளிகள் உயர்ந்து 8183.40 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

போஷ் 22,558.40 4.81%
ஹிண்டால்கோ 120.50 2.08%
ஹீரோ மோட்டோகார்ப் 3,075.00 1.81%
என்டிபிசி 150.60 1.76%
பி.எச்.இ.எல் 120.95 1.68%

விலை குறைந்த பங்குகள்

பிபிசிஎல் 1,047.00 -0.45%
ஐடிசி 366.95 -0.42%
கெயில் 375.50 -0.37%
ஹெச்டிஎப்சி வங்கி 1,165.90 -0.09%
கோல் இந்தியா 313.10 -0.06%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ