Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

16 நாட்களாக ஒரே எண்ணெய்; மெக்டொனால்டு நிறுவனத்திற்கு நோட்டீஸ்

மெக்டொனால்டு நிறுவனத்தினர் உணவு பண்டங்களில் 16 நாட்களாக ஒரே எண்ணெய் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு நிறுவனத்தில் கடந்த ஜூன் 17 ம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜூன் 1 முதல் ஜூன் 16ம் தேதி வரை ஒரே எண்ணெணையை பயன்படுத்தியுள்ளனர்.

மெக்டொனால்டு நிறுவனத்தில் பாமாயில் எண்ணெய் நீண்ட நாட்களாக மாற்றப்படவில்லை. இதனால், எண்ணெய் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இதனை தான் உணவுப்பொருட்களில் பயன்படுத்தியுள்ளனர். 16 நாட்களாக இந்த எண்ணெய் மாற்றப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மெக்டொனால்டு நிறுவனத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக புற்றுநோய், இதய நோய், கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ