Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிசர்வ் வங்கி துணை கவர்னராக என்.எஸ்.விஸ்வநாதன் நியமனம்!

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக என்.எஸ். விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களுள் ஒருவரான ஹெச்.ஆர்.கான் வரும் ஜூலை 3-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.

இந்த நிலையில் அமைச்சரவை நியமன குழு ன்.எஸ். விஸ்வநாதனை ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் என்.எஸ். விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இருக்கிறார். என்.எஸ். விஸ்வநாதன் பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் இயக்குநர் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close