Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7வது ஊதியக்குழு பரிந்துரை; மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று (29.06.16) ஒப்புதல் அளித்துள்ளது.


ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் கடந்த ஜனவரி 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர். 7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும்.

7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியத்தில் ஒட்டுமொத்தமாக 23.55 சதவிகித உயர்வுக்கு 7 வது ஊதியக்குழு சிபாரிசு செய்திருந்தது. 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 7வது ஊதியக்குழு குறித்து ட்விட்டர் வாசிகளின் பதிவுகள் கீழே

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ