Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7வது ஊதியக்குழு பரிந்துரை; அரசு ஒப்புதலால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (29.06.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

கடந்த சில நாட்களாக சரிவைச் சந்தித்து வந்த ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. ஆசியாவிலும் பல நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. இங்கிலாந்து வாக்கெடுப்பு முடிவுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் மீள முயற்சித்ததே இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பங்குச்சந்தை முன்னேற்றமடைந்தது. இதுமட்டுமின்றி 7வது ஊதியக்குழு பரிந்துரையை மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியத்தில் ஒட்டுமொத்தமாக 23.55 சதவிகித உயர்வுக்கு 7 வது ஊதியக்குழு சிபாரிசு செய்திருந்தது. இந்த 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஆட்டோ பங்குகௐள் அதிக ஏற்றம் கண்டன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 215.84 புள்ளிகள் உயர்ந்து 26,740.39 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 76.15 புள்ளிகள் உயர்ந்து 8204.00 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

போஷ் 22,686.20 5.40%
ஹீரோ மோட்டோகார்ப் 3,156.55 4.51%
என்டிபிசி 152.10 2.77%
பி.எச்.இ.எல் 121.95 2.52%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 159.25 2.44%

விலை குறைந்த பங்குகள்

லூபின் 1,532.90 -0.76%
கோல் இந்தியா 311.00 -0.73%
ஐடிசி 366.30 -0.60%
எச்யூஎல் 883.80 -0.44%
பேங்க் ஆப் பரோடா 153.90 -0.32%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ