Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - 10.07.2016 இதழுக்கானது.

கமாடிட்டி டிரேடிங் - 10.07.2016 இதழுக்கானது.

 

 

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஏற்றமடைந்து வர்த்தகமானது. பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வாரத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்தது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் சரிவிலிருந்து மீண்டு ஏற்றமடைந்து வர்த்தகமானது. திங்கள்கிழமை அன்று பேரல் கச்சா எண்ணெய் 47.60 டாலர்  என்ற நிலையில் இருந்தது. ஆனால் புதன்கிழமை அன்று கிட்டதட்ட 50 டாலரை நெருங்கியது. பின்னர் சற்று இறங்கி வெள்ளிக்கிழமை அன்று 48.24 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது. 

உலகச் சந்தைகள் பிரெக்ஸிட் தாக்கத்திலிருந்து விரைவில் சுதாரித்து கொண்டு முன்னேறியதுதான் காரணம். பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதாக எடுத்த முடிவு உலகச் சந்தைகளில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியிருந்தது. அதனால் சந்தைகள் திடீர் சரிவைச் சந்தித்தன ஆனால் சில நாட்களிலேயே அது பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்பது உணர்ந்து சந்தைகள் ஏற்றம் காண தொடங்கின. 

மேலும், அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் பிரெக்ஸிட் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கின. இதனால் டாலரின் மதிப்பும் குறைந்து, கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து மீண்டது. 

வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் ஏற்றமடைவதற்கு வாய்ப்புள்ளது. மீண்டும் பேரல் கச்சா எண்ணெய் 50 டாலரைத் தாண்டினால், 52 டாலரைத் தொடும் வாய்ப்புள்ளது.

 

தங்கம்!

தங்கம் கடந்த வாரத்தில் சிறதளவு ஏற்றத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமானது. பிரெக்ஸிட் தாக்கத்தினால் சந்தை மீது இருந்த தயக்கத்தினால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை தங்கத்தில் குவித்ததால் தங்கம் ஏற்றமடைந்தது. 

பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடைபெற்ற ஜூன் 23-ம் தேதி அன்று அவுன்ஸ் தங்கம் 1,261.20 டாலராக இருந்தது. வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான ஜூன் 24-ம் தேதி 1,320 டாலராக உயர்ந்தது. ஆனால் அதற்குப் பிறகு சந்தைகள் ஏற்றமடையத் தொடங்கியதும் தங்கத்தின் விலை ஏற்றம் குறைந்தது. 

எனினும் 1320 டாலர் என்பதற்கு குறையாமல் சிறிதளவு ஏற்றத்தில் பக்கவாட்டிலேயே வர்த்தகமானது. அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை அன்று 1,334.64 டாலருக்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் அவுன்ஸ் தங்கம் 1,355 முதல் 1,380 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 1,271 டாலராக வைத்துக்கொள்ளவும்.

 

வெள்ளி!

தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடந்த வாரத்தில் ஏற்றத்தில் வர்த்தகமானது. ஜூன் 23-ம் தேதி அவுன்ஸ் வெள்ளி 17.35 டாலராக இருந்தது. கடந்த வாரத்தில் படிப்படியாக விலை ஏற்றமடைந்து வெள்ளிக்கிழமை அன்று 19 டாலரைத் தாண்டி, கடந்த 22 மாதங்களில் இல்லாத உச்சத்தை அடைந்தது. தங்கத்தைப் போலவே, வெள்ளிக்கும் விலை ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 

ஏலக்காய்!

கடந்த வாரத்தில் ஏலக்காய் ஏற்றமடைந்து வர்த்தகமானது. பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாத காரணத்தினால் வரத்து குறைந்தது. இதனால் ஸ்பாட் சந்தையில் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமானது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஜூலை கான்ட்ராக்ட் 1.81% உயர்ந்து ஒரு கிலோ ஏலக்காய் ரூ.873.90 என்ற நிலையில் வர்த்தகமானது. 

வரும் வாரத்திலும் இதே ட்ரெண்ட் சந்தையில் தொடரலாம் என்பதால், ஏலக்காய் வர்த்தகம் விலை ஏற்றமடைய வாய்ப்புள்ளது. ஆனால், கேரளாவில் இடுக்கியில் பெய்த கனமழை விளைச்சலை அதிகப்படுத்த வாய்ப்புள்ளதால், விலை ஏற்றம் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும். ரூ.865 முதல் ரூ.885 என்ற வரம்பில் வர்த்தகமாகலாம்.

 

மஞ்சள்!

மஞ்சள் கடந்த வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. மஞ்சள் விளையும் பகுதிகளில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்ததால் மஞ்சள் விளைச்சல் அதிகரித்து அதனால் வரத்து அதிகரிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் லாப நோக்கில் ஃப்யூச்சர்களை விற்றதால் மஞ்சள் விலை குறைந்தது. 

 

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஜூலை ஃப்யூச்சர்ஸ் புதன்கிழமை அன்று 0.48% குறைந்து குவிண்டால் மஞ்சள் ரூ.8,292-க்கு வர்த்தகமானது. ஆகஸ்ட் ஃப்யூச்சர்ஸும் 0.62% குறைந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதால், இந்த விலை இறக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நாட்களில் விலை உயர்ந்து வர்த்தகமாகலாம். குவிண்டால் மஞ்சள் ரூ.8,475 வரை உயர வாய்ப்புள்ளது.

 

சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் அட்டவணை மெட்டல் :

 

சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் அட்டவணை அக்ரி :

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ