Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூலை 16, 17 சென்னையில் இரண்டு நாள் டெக்னிக்கல் அனாலிசிஸ் கட்டண பயிற்சி வகுப்பு..

ஜெ.சரவணன்

 

சென்னையில் ஜூன் 19-ம் தேதி பங்குச் சந்தை குறித்த அறிமுக கட்டண பயிற்சி கட்டண வகுப்பை நாணயம் விகடன் நடத்தியது. இதில் 60-க்கும் மேற்பட்ட  வாசகர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அதில் எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் சந்தை நிபுணருமான தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளித்தார். 

அரை நாள் பயிற்சி வகுப்பில் பங்குச் சந்தை குறித்த அடிப்படை விஷயங்களை முதலில் அருள்ராஜன் தெளிவுபடுத்தினார். பின்னர் பங்குச் சந்தையில் நாம் யார், முதலீட்டாளரா, டிரேடரா என்பதற்கான தெளிவை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய விஷயங்களை விரிவாகவும் தெளிவாக வும் எடுத்துக் கூறினார். 

ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டு தொகை எவ்வளவு, முதலீட்டின் மூலமாக வரும் வருமானம் நமக்கு எப்போது தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன் என்ன ஆகியவற்றை தெளிவு படுத்திக் கொண்டுதான் பங்குச் சந்தையில் களம் இறங்கவே வேண்டும். ஒரு நல்ல டிரேடர், அடிப்படையில் ஒரு நல்ல முதலீட்டாளராக இருக்க வேண்டும்.  அதற்கு ஃபண்டமென் டலில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்றவர், முடிவில்  வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த வகுப்பில் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள், ‘‘பங்குச் சந்தை முதலீடு பற்றிய அடிப்படையைத்  தெரிந்து கொண்டோம். இனி நாங்களும் ஸ்மார்ட் ன்வெஸ்டர்தான்” என்றனர்.

அடுத்த பயிற்சி வகுப்பு!

பங்குச் சந்தையில் எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவது என்பதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அந்த சூட்சுமத்தை கற்றுக் கொள்ள வேண்டுமா, ஜூலை 16, 17 சென்னையில் இரண்டு நாள் டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள நினைக்கும் முதலீட்டாளர்கள் இங்கே பதிவு செய்து கொள்ளலாமே!

பதிவு செய்ய:bit.ly/1qipfyR

படங்கள்: மீ.நிவேதன்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ