Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருவமழை எதிர்பார்ப்பு - இந்திய சந்தை ஜொலிக்குமா?

காலை 10 மணி நிலவரம்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதாக வெளியான தகவலையடுத்து இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரத்தில் வீழ்ச்சியை சந்தித்து வந்தன. பிரிட்டனின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு ஒப்புதல், வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, ஜூன் மாதத்திற்கான 'எப் அண்ட் ஓ' எக்ஸ்பைரி போன்ற காரணங்களால் 6வது வர்த்தக தினமாக நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை முடித்துக் கொண்டன. இதுமட்டுமின்றி பருவமழை எதிர்பார்ப்பைவிட நன்றாக பெய்யும் என கருதப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய காலை நேர நிலவரப்படி ஆசிய பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் மந்த நிலையில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 28.41 புள்ளிகள் சரிந்து  27,250.40 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.90 புள்ளிகள் சரிந்து  8355.70 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

டாடா ஸ்டீல் 335.85 1.39%
பி.எச்.இ.எல் 139.65 1.16%
அதானி துறைமுகங்கள் 215.40 1.01%
பேங்க் ஆப் பரோடா 161.25 0.91%
ஹிண்டால்கோ 126.90 0.75%

விலை குறைந்த பங்குகள்

என்டிபிசி 153.15 -1.80%
பஜாஜ் ஆட்டோ 2,619.00 -1.27%
பார்தி ஏர்டெல் 368.70 -1.25%
டாடா மோட்டார்ஸ் (டி) 300.30 -1.05%
ஹெச்சிஎல் டெக் 741.15 -0.96%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ