Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரெடிட் கார்டுகளில் வலம் வருகிறாரா கபாலி ரஜினி? உண்மையா?

ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கபாலி. இந்த படத்தில் தங்களை விளம்பர பார்ட்னராக முன்னணி நிறுவனங்கள் இணைத்துக்கொண்டுள்ளன.

ரஜினியின் கபாலி திரைப்படத்துடன் ஏர் ஏசியா விமான நிறுவனம், அமேசான், ஏர்டெல், ஸாப்சிஜே மற்றும் கேட்பேரி 5 ஸ்டார் போன்ற முன்னணி நிறுவனங்கள் விளம்பர பர்ட்னராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த நிலையில் சிட்டி பேங்க் நிறுவனம் கபாலி கிரெடிட் கார்டுகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் கிரெடிட் கார்டுகளிலும் ரஜினி வலம் வருகிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை என்பதால் இந்த தகவல் வெறும் வதந்தியே என்று கூறப்படுகிறது.

இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிரெடிட் கார்டில் இந்த மாதிரியான விளம்பரங்களை யாரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP