Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய மந்திரிசபை விரிவாக்கம்; 19 புதிய மந்திரிகள் பதவியேற்பு! தமிழகத்திலிருந்து..?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது. பதவி ஏற்ற அதே ஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறு மாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
 
 
இந்த நிலையில் மத்திய மந்திரிகளில் சிலரது செயல்பாடு பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மத்திய மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு செய்தனர். தீவிர ஆலோசனைக்கு பிறகு புதிய மத்திய மந்திரி சபை பட்டியலை பிரதமர் மோடி தயாரித்துள்ளார்.
 
புதிய மந்திரிகள் பட்டியல்:-
 
1. அனுபிரியா (உத்தரபிரதேசம்)
 
2. எஸ்.எஸ்.அலுவாலியா (மேற்கு வங்காளம்)
 
3. விஜய் கோயில் (ராஜஸ்தான்)
 
4. ராம்தாஸ் அத்வாலே
 
5. பி.பி.சவுத்திரி (ராஜஸ்தான்)
 
6. சி.ஆர்.சவுத்திரி (ராஜஸ்தான்)
 
7. பகன்சிங் (மத்திய பிரதேசம்)
 
8. அணில் மாதவ் தவே (மத்திய பிரதேசம்)
 
9. எம்.ஜே.அக்பர் (மத்திய பிரதேசம்)
 
10. ரமேஷ் ஜிகஜினகி (கர்நாடகா)
 
11. சுபாஷ் பம்ரி (மராட்டியம்)
 
12. மகேந்திர நாத் பாண்டே (உத்தரபிரதேசம்)
 
13. அஜய் தம்தா (அல்மோரா)
 
14. புருஷோத்தம் ரூபலா (குஜராத்)
 
15. ஜஸ்வந்த்சிங் (குஜராத்)
 
16. மன்சூக் மான்டவியா (குஜராத்)
 
17. ராஜன் கோகையன் (அசாம்)
 
18. கிருஷ்ணராஜ்
 
19. அர்ஜுன்ராம் மேக்வால்
 
புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். 
 
மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று புதியதாக பதவியேற்ற 19 மந்திரிகளில் தமிழகத்தை சேர்ந்தவர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close