Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியுடன் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் இணைந்தது!

எல்ஐசி மியூச்சல் ஃபண்ட் அசட் மேனெஜ்மென்ட் நிறுவனம், தனது மியூச்சல் ஃபண்ட் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியுடன் இணைந்துள்ளது.
 
நாடு முழுவதும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளது. இந்த நிலையில் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியுடன் இணைந்து மியூச்சல் ஃப்ண்ட் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக எல்ஐசி மியூச்சல் ஃபண்ட் அசட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தின் சீஇஒ சரோஜினி தெரிவித்துள்ளார். 
 
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் விக்ராந்த், "இந்தியாவில் மியூச்சல் ஃபண்ட் வளர்ச்சி விகிதம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் வங்கிகள் வாயிலாக மியூச்சல் ஃபண்ட் தயாரிப்புகளை விற்பனை செய்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது. 
 
எங்களது வங்கி வாயிலாக எல்ஐசி மியூச்சல் ஃபண்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்ய வாய்ப்பளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் வாயிலாக 
எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான நிதி தீர்வினை அளிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ