Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாப நோக்கில் பங்குகள் விற்பனையால் சந்தை சரிந்தது!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு ஒப்புதல், வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, பருவமழை எதிர்பார்ப்பைவிட நன்றாக பெய்யும் எனும் நம்பிக்கை போன்ற காரணங்களால் கடந்த 6 நாட்களாக பங்குச்சந்தை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் சந்தை சரிவுடன் இறக்கத்தில் முடிவடைந்தது.
 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 111.89 புள்ளிகள் சரிந்து  27,166.87 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.75 புள்ளிகள் சரிந்து  8335.95 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அரவிந்தர் ஃபார்ம் 771.00 1.74%
போஷ் 22,538.60 1.30%
கோல் இந்தியா 321.95 1.26%
பி.எச்.இ.எல் 139.40 0.98%
பார்தி இன்ப்ராடெல் 358.30 0.84%
 
விலை குறைந்த பங்குகள்
 
கெயில் 386.55 -2.58%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 161.25 -2.51%
டாடா மோட்டார்ஸ் (டி) 296.55 -2.29%
என்டிபிசி 152.60 -2.15%
பார்தி ஏர்டெல் 365.90 -2.00%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ