Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் இதுவரை டெபாசிட் கிடைத்தது இவ்வளவுதான்!

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கமே வீட்டில் முடங்கி கிடக்கும் கிட்டதட்ட 20,000 டன் தங்கத்தை வெளியே கொண்டுவருவது என்பதுதான். இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கிய பிறகு 3,000 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
கடந்த ஜூன் மாத மத்தியில் கணக்கெடுக்கப்பட்ட தரவின்படி, தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2,981 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தைப் பொறுத்தவரை கோயில் டிரஸ்ட்கள் மூலமாக அதிகளவில் டெபாசிட் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இந்தியாவில் 22 கோயில் டிரஸ்ட் மூலமாக 1,584 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1,311 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ