Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

74% அந்நிய முதலீடு ஆக்ஸிஸ் வங்கிக்கு அனுமதி!

ஆக்ஸிஸ் வங்கியில் 74 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 1994 ம் ஆண்டு யூடிஐ, எல்ஐசி மற்றும் ஜிஐசி ஆகிய நிதி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தொடங்கியதுதான் ஆக்ஸிஸ் வங்கி.
 
 
தற்போது ஆக்ஸிஸ் வங்கியிடம் 62 சதவிகிதமாக இருக்கும் அந்நிய முதலீட்டை 74 சதவிகிதமாக உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.  இந்த அனுமதி காரணமாக ரூ.12,973 கோடி அந்நிய முதலீடு அந்த வங்கிக்குக் கிடைக்கும். இப்போதைக்கு தனியார் வங்கியில் அந்நிய முதலீட்டுக்கு 74 சதவிகித அனுமதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close