4 Raghuram Rajan's | ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் யார்? மோடியின் ஆப்பிரிக்க பயணத்திற்கு பின் தேர்வு?
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் யார்? மோடியின் ஆப்பிரிக்க பயணத்திற்கு பின் தேர்வு?

வரும் செப்., 4 ம் தேதியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைகிறது. தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என அவர் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
 
இந்த நிலையில் புதிய கவர்னர் பதவிக்கு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.பி.ஐ., வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஆர்பிஐ துணை கவர்னர் உர்ஜித் படேல் உட்பட பலருடைய பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. மத்திய நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநரை பிரதமர் தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. 
 
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை (07.07.16) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 11ம் தேதி நாடு திரும்பும் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஆலோசனை நடத்திய பின், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை தேர்ந்தெடுப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ