Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இண்டர்நேட் வேகத்தை அறிய "மைஸ்பீடு ஆப்" டிராய் அறிமுகம்!

ஸ்மார்ட்போன்களில் இண்டர்நெட் வேகத்தை அறிய உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷனை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகப்படுத்தியுள்ளது.
 
 
வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் இணைய சேவைகளை வழங்க வேண்டும் என்று டிராய் வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நகரங்களில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் சில நிறுவனங்கள் உறுதியளித்ததை விட மிக குறைவான வேகத்தில் இணைய சேவை வழங்குவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து அவ்வப்போது டிராய்க்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து டிராய் நடத்திய ஆய்வில் 3ஜி சேவையை வழங்குவதாக கூறி 2ஜி வேகத்தில் இணைய சேவையை நிறுவனங்கள் வழங்கி வருவது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே, தற்போது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
 
இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,"ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தாங்கள் பெறும் இணையதள சேவையின் வேகத்தைக் கண்டறிய உதவும் புதிய அப்பிளிகேஷனை டிராய் உருவாக்கியுள்ளது. "மைஸ்பீடு ஆப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய செயலியை ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய அப்பிளிகேஷன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் இணைய வேகத்தை தெரிந்து கொள்வதுடன், அதனை டிராய் அமைப்பின் பகுப்பாய்வு பிரிவுக்கும் அனுப்பலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close