Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாங்கும் மனநிலை ஆரோக்கியமாக உள்ளதா? இந்தியர்களின் மனநிலை என்ன?

டிஆர்ஏ நிறுவனம் ‘வாங்கும் போக்கு குறியீடு’ (பிபிஐ) என்ற தலைப்பில் ‘வாங்குவதில் உள்ள ஆர்வம்’ குறித்து நடத்திய  ஆய்வு இந்தியாவில் வாங்கும் மனநிலையில் உள்ள வெளிப்படை, இரகசியம் மற்றும் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடைபெற்றது. இந்தியாவில் 2016 முதல் காலாண்டு ‘வாங்கும் போக்கு குறியீடு’ 0.42 (+1 தொடங்கி -1 வரை அளவு) வாங்கும் ஆர்வம் அதிகம் இருப்பதைத்  தெரிவித்தது. 
 
 
2016 ஏப்ரல் 0.46 என அதிக பிபிஐயில் தொடங்கி 2016 மே மாதம் 0.44 எனக் குறைந்தது. தாமதித்த வானிலை, பணவீக்கம், பிரெக்ஸிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜூனில் 0.37 என மேலும் சரிந்தது. இருப்பினும் 69% நுகர்வோர் மிதமாகவோ, ஆக்கப்பூர்வமாகவோ பதிலளித்ததுதான் இந்தக் காலாண்டின் ஒரேயொரு ‘ஆக்கப்பூர்வ’ விஷயம் ஆகும். 8 நகரங்களில் 3000 வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் ஆய்வின் அடிப்படையில் ‘வாங்கும் போக்கு குறியீடு’ வெளியாகும்.
 
டிஆர்ஏ ஆய்வு நிறுவன சிஇஓ என் சந்திரமௌலி 2016 முதல் காலாண்டு வாங்கும் போக்கு குறியீடு பற்றிக் கூறுகையில் ‘நம்பிக்கை (வாங்குவதற்கான காரணங்கள்) மற்றும் ஈர்ப்பு (வாங்க வேண்டும் என்று இழுக்கும் காந்த உணர்வு) ஆகியவற்றின் அடிப்படையில் இயற்கையாக உருவாவதே வாங்கும் போக்கு ஆகும். இவ்விரண்டின் இணைந்த செயல்பாடே வாங்க வேண்டும் என்னும் எல்லா முடிவுகளையும் எடுப்பதற்கான அடிப்படைகள் ஆகும். இந்திய நுகர்வோரின் வாங்கும் மனநிலை தொடர்பான பரிமாற்றம், ஆர்வம் மற்றும் சூழல் ஆகிய மூன்று அம்சங்களின் மீதான விரிவான ஆய்வே வாங்கும் போக்கு குறியீடு ஆகும். இந்தியாவிற்கான 2016 முதல் காலாண்டு +1 தொடங்கி -1 வரையிலான அளவில் பிபிஐ 0.42 வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதைத் தெரிவிக்கிறது. இது பல்வேறு காரணங்களால் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான பிபிஐ இறங்குமுகத்திலும் ஆக்கப்பூர்வ விஷயமாகும். வாங்கும் ‘ஆக்கப்பூர்வ’ மனநிலை அடுத்த இரு காலாண்டுகளில் நுகர்வோர் வாங்குவது குறித்து எத்தகைய முடிவுகளை எடுப்பார்கள் என்பது பற்றிய குறியீடாகும். தீடீர் ஆச்சரியங்கள் ஏற்படா நிலையில் வாங்கும் போக்கு ஏற்றம் பெறுமென எதிர்பார்க்கலாம்’ என்றார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ