Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்டர்நெட் இணைப்புடைய ஸ்மார்ட் கார்; அலிபாபா அறிமுகம் (வீடியோ)

 

via GIPHY

 
 
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் இன்டர்நெட் இணைப்புடைய ஸ்மார்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
 
 
ஆர்எக்ஸ் 5 என்ற பெயரில் இந்த காரை எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து அலிபாபா தயாரித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து விதமான அம்சங்களும் இந்தக் காரில் உள்ளதாக அலிபாபா தெரிவித்துள்ளது. வருங்காலத்தில் இந்த காரை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
இந்த ஸ்மார்ட் காரில் மேம்பட்ட எரிபொருள் தொழில் நுட்பம், மிகச் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம், கிளவுட் நுட்பத்திலான தகவல் அடிப்படையில் இது செயல்படும். இந்தக் காரின் செயல்பாட்டை குரல் வழி மூலம் கட்டுப்படுத்த முடியும். 
 
இந்தக் காரில் நான்கு கேமிராக்கள் உள்ளன. இதனால் இந்தக் காரில் பயணம் செய்யும்போதே செல்ஃபி படம் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ. 10.07 லட்சம் முதல் ரூ. 18.85 லட்சமாகும். 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ