Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண்டிகை சீசனை தெறிக்கவிட அமேசான் அதிரடி! சென்னை, கோவையில் இப்பவே...!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. 
 
 
இந்த நிலையில் இந்தியாவில் மேலும் தனது விற்பனை அதிகரிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும் தனது வர்த்தகத்தை உயர்த்தும் நோக்கில் புதியதாக 6 கிடங்குகளை அமைக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. 
 
 
சென்னை, கோவை, டில்லி, ஜெய்ப்பூர் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அமேசான் புதியதாக கிடங்குகளை அமைக்கிறது. பண்டிகை சீசனை முன்னிட்டு வாடிக்கையாளரின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த புதிய கிடங்குகள் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அமேசான் நிறுவனம் எவ்வளவு முதலீட்டில் இந்த கிடங்குகளை அமைக்கிறது என்பது குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை.  
 

via GIPHY

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ