Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய பங்குச்சந்தையால் சென்செக்ஸ் சரவெடி..!

காலை 9:45 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (11.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
ஆசிய பங்குச்சந்தைகள் மிகுந்த ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதாலும், அமெரிக்க பெடரல் வங்கி யூஎஸ் ஜாப் டேட்டாவின் காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 
 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 437.10 புள்ளிகள் உயர்ந்து  27,568.54 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 125.05 புள்ளிகள் உயர்ந்து 8448.25 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
என்டிபிசி 158.55 3.09%
ஐசிஐசிஐ வங்கி 248.90 2.87%
அதானி துறைமுகங்கள் 212.30 2.54%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 168.55 2.49%
பேங்க் ஆப் பரோடா 158.55 2.46%
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ