Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகள் 2 நாள் வேலை நிறுத்தம்; வங்கிசேவை கடுமையாக பாதிக்க வாய்ப்பு?

வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (12.07.16) மற்றும் நாளை மறுநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், வங்கிசேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
 
பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் ஸ்டேட்  பாங்க் ஆப் ஹைதரபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட்  பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 
 
இந்த  நிலையில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கீழ் செயல்படும் 5 வங்கிகளின் உயர்மட்ட குழு கூட்டம் கடந்த மே மாதம் நடந்தது. இதில் 5 வங்கிகளையும் பாரத  ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க கூடாது;  வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது; வாராக்கடன்களை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
 
இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்ததால் ஏற்கனவே அறிவித்தப்படி நாளை (ஜூலை 12) மற்றும் 13ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் காசோலை பரிமாற்றம், டிடி எடுத்தல், ஏடிம் பணம் தட்டுப்பாடு உள்ளிட்ட வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close