Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல் அண்ட் டி இன்ஃபோடெக் ஐபிஓ : கவனிக்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்!

இன்று (ஜுலை 11-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி முடியும் இதன் பொதுப் பங்கு வெளியீட்டில் 1.75 கோடி பங்குகள் விற்பனைக்கு விடப்படுகின்றன. பங்கின் விலை வரம்பு ரூ. 705-710. இதன் மூலம் ரூ. 1200 கோடி திரட்டப்படும். இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குக்கு ரூ. 10 வீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
 
1. 1996-ல் தொடங்கப்பட்ட இதன் வருவாய் ரூ. 5975 கோடி. இந்தியாவின் ஆறாவது பெரிய ஐடி நிறுவனம். இதன் தாய் நிறுவனமான எல் அண்ட் டி-யிடமிருந்தே இதற்கு பெரும்பாலான ப்ராஜக்ட்டுகள் கிடைக்கின்றன. 
 
2. இது பெரும்பாலும் அனைத்து துறைகளிலிருந்தும் வருவாய் ஈட்டும் நிறுவனமாக இருக்கிறது. வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகளில் 26.3 சதவிகித வருவாயும், இன்ஷூரன்ஸ் துறை மூலம் 10.7 சதவிகித வருவாயும், ஆற்றல் மற்றும் உற்பத்தி துறைகளில் 12.7 சதவிகிதம் வருவாயும், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஃபார்மா துறைகள் மூலம் 9.3 சதவிகித வருவாயும் ஈட்டுகிறது. 
 
3. வேகமாக வளரும் டிஜிட்டல், ஐஎம்எஸ் மற்றும் டெஸ்டிங் சேவைகள் மூலம் மட்டுமே 30 சதவிகித வருவாயை ஈட்டுகிறது. இதன் 69 சதவிகித வருவாய் அமெரிக்காவிலிருந்தும், 17 சதவிகிதம் ஐரோப்பாவிலிருந்தும் கிடைக்கிறது. இங்கிலாந்திலிருந்து 2 சதவிகிதம் மட்டுமே வருவாய் வருவதால் பிரெக்ஸிட் விவகாரத்தினால் பெரிய பாதிப்பு இருக்காது. இதன் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் சதவிகிதம் 96.9 ஆகும். 
 
4. இதன் வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதம். 2015-16 நிதி ஆண்டில் ரூ. 922.2 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதன் செயல்பாட்டு லாபம் 2013-14 நிதி ஆண்டைக் காட்டிலும் 2015-16 நிதி ஆண்டில் 10.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மற்ற ஐடி நிறுவனங்களைக் காட்டிலும் அதிகம். மேலும் அதிக அளவில் டிவிடெண்ட்டும் வழங்கி வருகிறது. 
 
5. இதற்கு தற்போது 258 வாடிக்கையாளர்களும், 20 ஆயிரம் பணியாளர்களும் உள்ளனர். இதன் 49 சதவிகித வாடிக்கையாளர்கள் உலகின் முன்னணி 500 ஃபார்ச்சூன் நிறுவனங்களில் பட்டியலில் இருப்பவை. இதன் சிஇஓ மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜலோனா உட்பட முக்கிய பொருப்புகளில் உள்ள அனைவரும் அந்தந்தத் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் அனுபவம் உள்ளவர்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ