Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழாவது ஊதியக்குழு: எதிர்பார்ப்புடன் தமிழக அரசு ஊழியர்கள்!

ரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 01.01.2016 முதல் அமலாக்கம் செய்யப்பட, ஆணை பிறப்பிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறைந்தபட்ச ஊதியம், படிகள் (Allowances) போன்றவற்றின் மீதான ஊழியர்களின் திருப்தியின்மை காரணமாக சற்றே தேக்கம் கண்டுள்ளது.
 
 
தொடரும் பேச்சுவார்த்தைகள், முட்டுக்கட்டைகளை விலக்கி பரிந்துரைகள் பரிபூர்ணமாக அமலாக்கம் செய்யப்பட வழி வகுத்துவிடும், விரைவில் என்கிற நம்பிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்!
 
இனி, தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கான ஊதியப் பலன் அறிய அரசின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
 
01.06.1988-ல் அமலாக்கப்பட்ட தமிழக அரசின் ஐந்தாவது ஊதியக் குழுவில்தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பெற்றனர், தமிழக அரசு ஊழியர்கள்.
 
இதைத் தொடர்ந்து 01.01.1996 மற்றும் 01.01.2016 ஆகிய தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழக அரசின் ஊதிய சீரமைப்பை (Pay Revision) எண்ணிக்கையில், முறையே ஆறாவது, ஏழாவது ஊதியக்குழு என குறிப்பிடலாம்.
 
எனினும், அவை (Official Committee on Pay Revision) ஊதிய சீரமைப்புக்கான அலுவல் குழு என்றழைக்கப்பட்டதே தவிர, ஊதியக் குழு எனக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பரிந்துரை ஊதிய சீரமைப்புக்குத்தான்.
 
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ18,000/- இதன் கணக்கீடு பின்வருமாறு:
 
மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் + தர ஊதியம் = 5200+1800 = 7000
 
01.01.2016 அன்று உள்ளவாறு ரூ.7000-க்கான 125% அகவிலைப்படி 8750 = 15750
 
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, கிடைக்கப் பெறும் பணப்பலன் (குறைந்தபட்சம்) ரூ.2250/- (வீட்டு வாடகைப்படி மருத்துவப்படி போன்ற படிகள் நீங்கலாக)
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு, கடைசி இரண்டு அலுவல் குழு பரிந்துரைகளையும் சேர்த்துக் கொண்டால், இதுவரை ஏழு ஊதிய சீரமைப்பு செயல்பட்டுள்ளது. அவைகள் மூலம் கிடைத்த குறைந்தபட்ச ஊதியம் மற்றும் குறைந்தபட்ச பணப்பலன் பின்வருமாறு:
 

 

ஊதியக்குழு

 

வரிசை எண்

அமலாக்க தேதி

குறைந்த பட்ச ஊதியம்

குறைந்த பட்ச பணப்பலன்

%

1

01/06/60

ரூ.50

ரூ.5

-

2

02/10/70

ரூ.130

ரூ.10

-

3

01/04/78

ரூ.250

ரூ.25.5

5.00%

4

01/10/84

ரூ.450

ரூ.30.7

7.00%

5

01/06/88

ரூ.750

ரூ.100

10.00%

6

01/01/96

ரூ.2550

-

40.00%

7

01/01/06

ரூ.4800+1300 =6100

ரூ.1300

-

 

 
 
* 01.01.2006 முதல் அமலாக்கம் பெற்று தற்போது நடைமுறையில் உள்ள அலுவல் குழு ஊதிய சீரமைப்பு மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் அமைந்தது. இதில் சதவிகித (percentage) ரீதியில் பணப்பலன் தரப்படவில்லை. தர ஊதியம் பணப்பலனாக தரப்பட்டது.
 
இந்த தர ஊதியம் குறைந்தபட்சம் ரூ.300-ம் அதிகபட்சமாக ரூ.10000- மும் ஆக இருந்தது. இதனை அடிப்படை ஊதியத்தின் துவக்க நிலைக்கு கணக்கிட்டுப் பார்க்கையில், குறைந்தபட்ச பணப்பலன் 51 சதவிகிதமாகவும், அதிகபட்ச பணப்பலன் 86 சதவிகிதமாகவும் இருந்தது.
 
அதாவது, 2550 - 3200 என்ற ஊதிய ஏற்றமுறைக்கு தரப்பட தர ஊதியம் ரூ.1300. இது இந்த ஊதிய ஏற்றமுறையின் துவக்க ஊதியமான ரூ.2550-க்கு 51% ஆகும்.
 
இதே போல், 5000 - 8000 என்ற ஊதிய ஏற்றமுறைக்கு வழங்கப் பெற்ற தர ஊதியம் ரூ.4300. இது ரூ5000- என்ற துவக்க நிலை ஊதியத்தில் 86% ஆகும்.
 
ஏழாவது ஊதியக்குழு அறிவித்த குறைந்த பட்ச பணப்பலன்!
 
01.01.2016 அன்று உள்ளவாறு, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.7000/- (5200+1800) அடிப்படை ஊதியம் ரூ7000-க்கு தற்போது கிடைத்துள்ள பணப்பலன் ரூ.2250/- இது, அடிப்படை ஊதியத்தில் 32.14% என்றாகிறது.
 
இதே அடிப்படை ஊதியம் ரூ.7000/-டன் இதற்குரிய 125 சதவிகித விலைப்படி தொகை ரூ.8750/-யும் சேர்த்து வரும் ஒட்டு மொத்த தொகை ரூ.15,750. இந்த 15750-க்கு கிடைத்த பணப்பலன் ரூ.2250- என எடுத்துக் கொண்டால், அது 14.28 சதவிகிதமாக இருக்கும்.
 
ஆக, சதவீதக் கணக்கில் பணப்பலன் கணக்கிட்டுப் பார்க்கையில், முந்தைய ஊதியக்குழு மூலம் கிடைத்த பணப்பலனைவிட தற்போதைய பணப்பலன் குறைவாய் இருக்கிறது.
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்?
 
தற்போது மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000. மத்திய அரசு ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்படும் தமிழக அரசின் ஊதிய சீரமைப்புக் குழு, இதே குறைந்தபட்ச ஊதியத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கும் பரிந்துரைக்குமா?
 
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.18000/- குறைந்தபட்ச ஊதியம் என்பது 01.01.2016 அன்று உள்ளபடி நிலவிய குறைந்த பட்ச ஊதியமான ரூ.7000-க்கு இணையானது.
 
ஆனால், அதே 01.01.2016 அன்று தமிழக அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.6100/- மட்டுமே. அதாவது, காவலர், அலுவலக உதவியாளர் போன்ற பதவிகளுக்கானது இந்த ரூ.6100/- அடிப்படை ஊதியம் 4800/-ம் தர ஊதியம் ரூ.1300/-ம் சேர்ந்து 6100 ஆகும். 
 
இதற்கேற்ற வீதாச்சாரத்தில் குறைந்தபட்ச ஊதியம் அமையலாம். அதே சமயம், சென்ற அலுவல் குழு பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை சற்று கூடுதலாகவே தந்த அரசு, குறைந்தபட்ச ஊதியத்தை, கொள்கை முடிவாக, மத்திய அரசுக்கு இணையாகவும் வழங்கலாம் இப்போது.
 
ஓய்வூதியம்!
 
மத்திய அரசின் பணியில் உள்ள பயனாளிகள் 47 லட்சமாகவும், ஓய்வு பெற்றோர் 53 லட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
 
தற்போது ரூ.3500- என உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம், ஊதியக்குழு பரிந்துரைப்படி ரூ.9000- ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
அதாவது, பணியில் இருப்போருக்கு தரப்பட்ட அதே வீதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதிய சீரமைப்பு, ரூ.7000- ஊதியத்துக்கு ரூ.8000. அதில் பாதியான ரூ.3500, ஓய்வூதியத்துக்கு ரூ.9000/- பணியில் உள்ளோருக்கும், ஓய்வு பெற்றோருக்கும் சமவிகித மரியாதை .
 
தமிழக அரசின் நடைமுறையும், இதுவேதான்.அப்படியானால், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.9000. மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் தரப்படுமா?
 
ரூ.3500-க்கு இணையான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500/- தரப்பட வேண்டும் என்பது ஓய்வூதியம் பெறுவோரின் பத்தாண்டு கால கோரிக்கை தீர்மானிப்பது அலுவல் குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் கொள்கை முடிவு.
 
எப்போது வரும் ஊதிய சீரமைப்பு?
 
மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவுக்கு இணையான தமிழக அரசின் அலுவல் குழு அறிக்கை எப்போது வரும் என்பது எதிர்பார்ப்பு.
 
அலுவல் குழு அறிக்கை சமர்ப்பித்து, அந்த அறிக்கையை அரசு பரிசீலித்தபிறகுதான் புதிய ஊதியம் இறுதி வடிவம் பெறும்.
 
இதற்குமுன் 01.01.1996-ல் அமலாக்கம் செய்யப்பட்ட ஊதிய சீரமைப்புக்கு 31.07.1997-ல் அலுவல் குழு அமைக்கப்பட்டது. அலுவல் குழு 16.03.1998 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. 13.04.1998-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதே போல், 01.01.2006-ல் நடைமுறைபடுத்தப்பட்ட புதிய ஊதியத்துக்கான அலுவல் குழு 28.08.2008 அன்று அமைக்கப்பட்டு, 27.05.2009 அன்று தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.
 
பரிந்துரையின் பேரில் 01.06.2009 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
 
மத்திய அரசு, தனது ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் முதலானவற்றை மேம்படுத்தலாம்.
 
அதன் அடிப்படையில்  அமையும் அலுவல் குழு, ஆய்வுக்கு தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரைகளை சமர்ப்பிக்கக் கூடும். அதனைத் தொடர்ந்து அரசின் பரிசீலனை அரசாணை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டது முதல் மேம்பட்ட ஊதியம் கிடைத்த பதவிகளும் உண்டு, தமிழக அரசியல்.
 
இன்று வரை குறையொன்றுமில்லை; இனியும் இருக்காது என்பதே ஊழியர்களின் நம்பிக்கை!
 
-ஜாலிவாக்கர்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ