Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேக்ரோ எக்னாமிக் டேட்டாவால் சந்தை அதிகரிப்பு!

காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (12.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஜப்பானில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதன் எதிரொலியாக ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்ற நிலைப்பாடு போன்ற காரணங்களாள் நேற்ற்ய் சர்வதேச அளவில் பங்கு முதலீட்டாளர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சந்தை மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் இன்று மேக்ரோ எக்னாமிக் டேட்டா சாதகமாக வெளியானதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன. 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 63.73 புள்ளிகள் உயர்ந்து  27,688.50 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.00 புள்ளிகள் உயர்ந்து 8484.95 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 133.85 3.72%
ஆக்சிஸ் வங்கி 552.90 1.56%
ஐசிஐசிஐ வங்கி 253.10 1.30%
கிராஸிம் 4,622.00 1.27%
டாடா ஸ்டீல் 331.10 1.25%
 
விலை குறைந்த பங்குகள்
 
கோல் இந்தியா 315.25 -1.76%
ஆரோபிந்தோ பார்மா 776.25 -1.42%
டாடா பவர் 73.10 -1.15%
சிப்லா 516.20 -1.11%
டிசிஎஸ் 2,440.30 -0.97%
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close