Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் இவர்தானா? ஏன்?

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய கொள்கைக் குழுவின் (நிதி ஆயோக்) துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 
பொருளாதார நிபுணரான அரவிந்த் பனகரியா, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ளார். உலக வங்கி, உலக வர்த்தக மையம் போன்ற முக்கிய அமைப்புகளிலும் பல்வேறு பதவிகளை பனகரியா வகித்துள்ளார்.
 
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக தற்போது இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய கவர்னராக பனகரியா நியமிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்ததும், மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக "நிதி ஆயோக்" என்ற அமைப்பை ஏற்படுத்தியது. அந்த அமைப்பின் துணைத் தலைவராக பனகரியா கடந்த 2015-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய அரசால் விரைவில் வெளியிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான முடிவை பிரதமர் அலுவலகம் இன்று (ஜூலை 12) எடுக்கலாம் என கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ