Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்க காரணம் இதுதான்!

இன்றும் (12.07.16), நாளையும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை எதிர்த்தும் வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது. 
 
அதன்படி இன்று பாரத ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகளும், ஜூலை 13 ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்திருந்தன. 
 
இதற்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ