3 exide life insurance | எக்ஸைடு லைஃப் ஸ்மார்ட் டெர்ம் திட்டம்; எக்ஸைடு லைஃப் இன்சூரன்ஸ் அறிமுகம்
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எக்ஸைடு லைஃப் ஸ்மார்ட் டெர்ம் திட்டம்; எக்ஸைடு லைஃப் இன்சூரன்ஸ் அறிமுகம்

முழுமையான ஆயுள் காப்பீடு மற்றும் செலுத்தப்பட்ட ப்ரீமியம்களை பாலிசி காலம் நிறைவடைந்தவுடன் வழங்கும் தனித்துவமிக்க ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எக்ஸைடு லைஃப் இன்சூரன்ஸ் அறிவித்துள்ளது.
 
 
உங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தன்தை உருவாக்குவது என்பது, உங்களது மற்றும் உங்களது குடும்பத்தின் கனவுகளை ஈடேற்றும் பயணத்தை துவங்குவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய படிநிலையாகும். சிக்கனமான வருடாந்திர ப்ரீமியத்துடன், உங்களுக்கும் மற்றும் உங்களது குடும்பத்திற்கும் உதவ, இந்த இடத்திலேயே புரொடெக்ஷன் பிளான்கள் அல்லது டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் உதவும்.
 
இந்த நிதியியல் அடித்தளத்தை சாதிக்க ஒரு அறிவார்ந்த வழிமுறை இருக்கையில், வழக்கமான வழிமுறையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? இதற்கு எக்ஸைடு லைஃப் ஸ்மார்ட் டெர்ம் பிளான் உதவும். இத்தனித்துவமிக்க திட்டம் முழுமையான ஆயுள் காப்பீட்டினை மாத்திரம் வழங்குவதோடு மட்டுமின்றி, பாலிசி காலகட்டம் நிறைவடைந்தவுடன் செலுத்தப்பட்ட ப்ரீமியம்களை திரும்பத்தரும் உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது.
 
நிலையானதொரு நிதியியல் அடித்தளத்தை கட்டமைப்பதற்கான 3 அறிவார்ந்த மற்றும் நெகிழ்வுதன்மை கொண்ட வழிமுறைகள்
 
கிளாஸிக் : தேர்ந்தெடுக்கும் ஆயுள் காப்பிற்கு பணம் செலுத்தவும் மற்றும் பாலிசி 
 
காலகட்டம் நிறைவடைந்தவுடன், உங்களால் செலுத்தப்பட்ட வருடாந்திர 100 சதவிகித ப்ரீமியம் தொகை திரும்பத்தரப்படும்.
 
ஸ்டெப்-அப் : தேர்ந்தெடுக்கும் ஆயுள் காப்பிற்கு பணம் செலுத்தவும் மற்றும் பாலிசி 
 
காலகட்டம் நிறைவடைந்தவுடன், உங்களால் செலுத்தப்பட்ட வருடாந்திர 150 சதவிகித ப்ரீமியம் தொகை திரும்பத்தரப்படும்.
 
காம்பிரஹென்சிவ் : முதிர்ச்சியின் போது, பகுதி ரிட்டர்ன்களை வழங்குவதன் வழியாக மேம்பட்ட
பாதுகாப்பினை அளிக்கிறது.
 
இந்த வகையினத்தில் வழங்கப்படும் மிக தனித்துவமிக்க வசதி காம்பிரஹென்சிவ் வகையினமாகும். இந்த வகையினத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி காலகட்டத்திற்கு, கிளாஸிக் வகையினத்தில் நீங்கள் லைஃப் கவருக்கான ப்ரீமியம் செலுத்துவதை தேர்ந்தெடுக்கலாம். கூடுதலாக, சிக்கனமானதொரு கூடுதல் ப்ரீமியத்தை செலுத்துவதன் வழியாக, நீங்கள் குறிப்பிடத்தக்க ஆயுள் காப்பீட்டினையும் சேர்க்கலாம். பாலிசி காலகட்டம் நிறைவடைந்தவுடன், கிளாசிக் வகையினத்தின் கீழ் நீங்கள் செலுத்திய 100 சதவிகித ப்ரீமியம் தொகைகள் முதிர்ச்சியின் போது திரும்பத்தரப்படும். எதிர்பாராத விதமாக, பாலிசிதாரர் மரணிக்கும்பட்சத்தில், கிளாஸிக் வகையினத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த லைஃப் கவர் மற்றும் செலுத்தப்பட்ட கூடுதல் லைஃப் கவர், உங்கள் குடும்பத்திற்கு செலுத்தப்படும்.
 
மேலும் செலுத்தப்படும் ப்ரீமியம்களின் மீது பிரிவு 80C - ன் கீழும் மற்றும் முதிர்ச்சி பேஅவுட் தொகையின் மீது பிரிவு 10 (10) D வழியாகவும் நீங்கள் வரியை மிச்சம் பிடிக்கலாம். வரிப்பலன்கள் அப்போதைக்கு அமலில் இருக்கும் வருமான வரி சட்டங்களின் படி அமையும்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த, எக்ஸைடு லைஃப் இன்சூரன்ஸ், திட்ட மேலாண்மை - செயல் துணைத்தலைவர் திரு.சஞ்சய் திவாரி அவர்கள்,“எக்ஸைடு லைஃப் இன்சூரன்ஸின் நீண்ட கால நிலையான கூட்டாளி என்னும் நிலையை மனதில் கொண்டு, எங்களது புதிய வழங்குதலான எக்ஸைடு லைஃப் ஸ்மார்ட் டெர்ம் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டம், எங்களது வாடிக்கையாளர்களின் தனித்துவமிக்க தேவைப்பாடகளான - பாதுகாப்பு மற்றும் மணி பேக் அகியவைகளை ஒற்றை வழியாக இல்லாமல் மூன்று வழிமுறைகளில் நிலையான நிதியியல் அடித்தளத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் தொகையை வழக்கமான முறையிலும், குறிப்பிட்ட காலகட்டத்திறகு அல்லது ஒரு முறை கட்டணமாகச் செலுத்தும் தேர்வு வாடிக்கையாளர்களை சாரும். இத்திட்டத்தின் காம்பிரஹென்சிவ் வகையினம், சந்தையில் எங்களை வேறுபடுத்திக் காட்டுதவதாகும்” என்று கூறினார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ