Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்களுக்காக... நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு இதுதான்; ஏ.கே.பிரபாகர் என்ன சொல்றாங்கன்னா?

பொதுத்துறையைச் சேர்ந்த "பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்" நிறுவனத்தின் பங்கை நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகர் பரிந்துரைத்துள்ளார்.
 
 
தற்போதைய சூழ்நிலையில் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா பங்கு சந்தையில் சரிவடையும்போது ரூ.148க்கு அருகில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 137 வைத்துக்கொள்ளவும். அடுத்த 8 முதல் 10 வாரங்களில் ரூ.168 வரை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. 
 
பவர்கிரிட் நிறுவனத்தின் பங்கு அதிகபட்ச உயர்வாக கடந்த 2007 ம் ஆண்டு ரூ.167 வரைக்கு சென்றது. இப்போது 59வது வார உயர்வை தகர்த்து மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில்  அதிக ஏற்ற, இறக்கம் இல்லாமல் பங்கு தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பட்சத்தில் ரூ.167 என்ற உயரத்தை எட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது.
 
பவர்கிரிட் பங்கைப் பொறுத்தவரை மைனர் ரெசிஸ்டன்ஸ் ரூ.150, ரூ.160, ரூ.167 என மூன்று லெவலில் உள்ளது. இந்த மூன்று லெவலையும் கடக்கும் பட்சத்தில் அடுத்த 14 முதல் 16 மாதங்களில் ரூ.204 அல்லது ரூ.222 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த 34 முதல் 36 மாதங்களில்  பவர்கிரிட் பங்கு ரூ.345 முதல் ரூ.380 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் ஏ.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ