Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகளை அடகு வைக்கும் பெரும்பாலான நிறுவனங்கள்; முதலீட்டாளர்களே உஷார்!

Paresh Nemade, Research Analyst,  InvestorsareIdiots.com 
 
பங்குகளை அடமானம் வைப்படி என்றால்?
 
வங்கிகளிலோ வேறு ஏதும் கடன் தருபவர்களிடமோ நம் பங்குகளை அடமானமாக வைத்து கடனைப் பெறலாம். நம் பங்குகளை அடமானமாக கொடுத்து பணத்தைப் பெறுவதுதான் இது.
 
 
முதலீட்டாளர்கள் குறிப்பாக ரீடெய்லர்கள் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன், நிறுவனர்கள் நம் பங்குகளை எப்படி உபயோகிக்கிறார்கள், இல்லை எதற்காக அடமானம் வைக்கிறார்கள் என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், இது கவலைப் பட வேண்டிய விஷயமாக மாறி விட வாய்ப்புள்ளது.
 
ஏற்ற இறக்கத்தோடு உள்ள சந்தையில், நம் பங்குகளின் நிலை கவலைக்கிடமானதுதான். காரணம், சந்தையில் விலை நிலவரங்கள் மாற அது ஒரு காரணமாக இருக்கக்கூடும். சந்தையில் சரிவு ஏற்பட்டால், நம் பங்குகளின் மொத்த மதிப்பும் சரிவடையும். பிறகு, முதலீட்டாளர் நிறுவனரிடம் கடன் மதிப்பை அதிகரிக்குமாறு கேட்கலாம். இதனால், நிறுவனர் அதிக பங்குகளை மேலும் அடமானம் வைக்க வேண்டி வரும்.
 
ஒருவேளை கடன் கொடுத்தவர்கள் பங்குகளின் உரிமையைப் பெற்றுவிட்டால், அவர்கள் அதை விற்றுக் கொள்ளலாம். இதனால் சந்தையில் பங்குகளின் விலை குறையும். மேலும், முதலீட்டாளர்களுக்கு தவறான கருத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
 
சந்தை நிலவரம் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், பங்குகளின் மதிப்பு கூடினாலும், நம் வருவாயோ கடனை அடைக்கக் கூடிய அளவு தொகையோ கிடைக்காவிட்டால், சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
 
எனவே, முதலீட்டாளர்கள் நிறுவனர்கள் பங்குகளை என்ன செய்கிறார்கள் என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். மேலும், முதலீட்டாளர்கள் எதற்காக தங்கள் பங்குகள் அடமானம் வைக்கப்படுகிறது எனவும், அடமானம் வைத்ததற்குப் பிறகு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நிறுவனம், நம்மிடம் இருந்து பெறும் பணத்தை திறமையாக கடனை அடைக்க உபயோகித்தால் அது நிறுவனத்தின் வருவாயில் ஏற்றத்தைக் கொண்டு வரும். இதனால் பங்குகளின் மதிப்பு கணிசமாக சந்தையில் ஏறும்.
 
ஜூன் 2016ல், RBI வெளியிட்டுள்ள Financial Stability Report படி, பங்குகளின் அடமானம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
 
2016ன் RBI Report முடிவுகள்:
 
இந்தியாவில் உயர் அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து நிறுவனர்களாக இருந்து வருகின்றனர்.
குறிப்பிடப்பட்டுள்ள NSE மற்றும் BSE நிறுவனங்களில், நிறுவனர்களின் பங்குகள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகமாக அடமானம் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும், மார்ச் 2013ல் 11% ஆக இருந்த அடமானம் வைக்கப்பட்ட பங்குகள், மார்ச் 2016ல் 15% ஆக உயர்ந்துள்ளது.
 
குறிப்பிடப்பட்டுள்ள NSE நிறுவனங்களில் ஏறத்தாழ 33% (1539) நிறுவன்ங்கள் மார்ச் 2016ல் பங்குகளை அடமானம் வைத்ததாகத் தெரிகிறது.
 
மார்ச் 31, 2016ல் சந்தையில் ரூ.100 பில்லியனுக்கு அதிகமாக மூலதனமாக வைத்துள்ள NSE நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகள் 4.2%. இது மார்ச் 2015ல் உள்ள அதே சதவிகிதம்தான்.
 
உதாரணமாக, மார்ச் 2016 நிலவரப்படி TCS நிறுவனத்தின் அடமான பங்குகள் 3.15%. அதே போல, Asian Paints 13.19% பங்குளையும், Arshiya Ltd 100% பங்குகளையும் அடமானமாக வைத்து விட்டனர்.
 
 
 
தொகுப்பு:  ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ