Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தை சாதகம்; இந்திய சந்தை அமோகம்!

காலை 9.50 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (05.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
நேற்றைய பங்குச்சந்தையில் ஐஐபி, சிபிஐ டேட்டா போன்ற மேக்ரோ எக்னாமிக் டேட்டா சாதகமாக வெளியானதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சர்வதேச சந்தைகள் சாதகமாக நிலவுவதால் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த சில நாட்கள் மட்டும் அமெரிக்க வேலைவாய்ப்பு முடிவு காரணத்தால் சர்வதேச சந்தை எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 73.99 புள்ளிகள் உயர்ந்து 27,880.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.30 புள்ளிகள் உயர்ந்து 8534.60 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி.எச்.இ.எல் 145.35 5.10%
ஓஎன்ஜிசி 238.75 4.76%
டாடா ஸ்டீல் 351.00 2.54%
ஹிண்டால்கோ 137.60 1.74%
அதானி துறைமுகங்கள் 221.00 1.38%
 
விலை குறைந்த பங்குகள்
 
இன்டஸ் இன்ட் வங்கி 1,110.55 -1.30%
பார்தி Infratel 346.60 -1.06%
மாருதி சுசூகி 4,339.10 -0.72%
எய்கர் மோட்டார்ஸின் 19,538.80 -0.70%
யெஸ் பேங்க் 1,146.95 -0.58%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ