Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூனில் சில்லறை பணவீக்கம் 5.77 சதவிகிதமாக அதிகரிப்பு!

ஜூன் மாதத்திற்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5.77 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் சில்லரை பணவீக்கம் 5.76 சதவீதமாக இருந்தது.
 
 
உணவுப்பொருட்களின் பணவீக்கம் 7.79 சதவிகிதமாக உயர்ந்ததன் காரணமாக சில்லரை வர்த்தக பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. மே மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தியும் வெளியாகியுள்ளது. அதன்படி தொழில்துறை உற்பத்தி 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ